பழவேற்காடு கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள் - பழவேற்காடு கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழவேற்காடு கடற்கரையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியை பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சாந்தி, இயக்குநர் சசிகுமார் தலைமையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மல்கார் கலாம்பே, பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சு கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் அழியாமல் இருக்க கடற்பகுதியை அசுத்தப்படுத்தக்கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.