தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் சந்தனமரம் மாயம்! - Dharmapuri Armed Forces Ground
தருமபுரி வெண்ணாம்பட்டி காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் இருந்த இரண்டு சிறிய சந்தன மரங்களை நேற்று முந்தினம் இரவு (நவ. 12) அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிச் சென்றுள்ளனர். 24 மணி நேரமும் காவல் துறை பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஆயுதப்படை மைதானத்தில், சந்தன மரங்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.