உப்பனாற்றின் கரை உடையும் அபாயம் - அச்சத்தில் ஐந்து கிராம மக்கள்!
நாகப்பட்டினம் : சீர்காழியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக உப்பனாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால், சிவனார்விளாகம் பகுதியில் உள்ள ஆற்றின் கரை அதிகளவில் அரிப்பு ஏற்பட்டு உடையும் தருவாயில் உள்ளது. கரை உடைப்பு ஏற்பட்டால் திட்டை, தில்லைவிடங்கம், சிவனார்விளாகம் உள்ளிட்ட 5க்கும் மேற்ப்பட்ட கிராமமும், சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு போர்கால அடிப்படையில் ஆற்றின் கரையைப் பலபடுத்தி கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமேன கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.