மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக தோன்றிய குளம்: கப்பல் விட்டு போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் - கப்பல் விடு போராட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாட்டாண்மை கட்டட வளாகத்தில் நேற்றிரவு (அக். 20) பெய்த கன மழையால், அப்பகுதி குளம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து அரசின் அலட்சியத்தை கண்டிக்கும் வண்ணம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மழைநீரில் மீன்பிடித்து, காகித கப்பல் விட்டு போராட்டம் நடத்தினர்.