முகக்கவசம் அணியாதவர்களுக்கு கரோனா பரிசோதனை! - கரோனா பரிசோதனை செய்த காவல் துறை
நீலகிரி: உதகமண்டலத்தில் கரோனா பரவல் ஓயாத நிலையில் சாலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த பொதுமக்களுக்கு காவல் துறையினர் கரோனா பரிசோதனை செய்தனர். இதில் சுமார் 50 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, ஒரு சிலர் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.