தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகலை எரிக்க முற்பட்டவர்கள் கைது! - மத்திய தொழிற்சங்கங்கள்
மின்சாரச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், தனியார்மயமாக்கலை கண்டித்தும், நாடு முழுவதும் சட்டநகல் எரிக்கும் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நகல் எரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது சட்ட நகலை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.