நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்திய இளைஞர்கள் கைது! - இளைஞர்கள் கைது
திருவாரூர்: கச்சனம் என்ற இடத்தில் மது விலக்கு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரு இளைஞர்களை சோதனை செய்தனர். அதில் இருவரும் உடல் முழுவதும் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர்.