கொடைக்கானல் அருகில் மீண்டும் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு! - கொடைக்கானலில் மீண்டும் மண் சரிவு
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்கம் பெரியகுளம் சாலையில் மீண்டும் இரண்டாவது முறையாக ராட்சத பாறைகள், மண் சரிந்து விழுந்து போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட போக்குவரத்து வசதிகளின்றி சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.