ஆரத்தி எடுக்க பெண்ணிடம் மலைப்பாம்பை எடுத்து நீட்டிய வனத்துறை ஊழியர்கள் - people worship the caught Python
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பகுதி மலை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். அப்போது, அந்த கிராம பெண்கள் மலைப்பாம்புக்குக் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஆண்கள் சிலர், ‘அது பாம்பாக இருந்தாலும் கடவுள்’ என்றுகூறித் தொட்டு வேண்டிக்கொண்டனர். ஆம்பூர் வனச் சரகத்தில் பிடிபட்ட மலைப்பாம்புகளில் மிகப்பெரியது இதுதான் என்று வனக் காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பிடிபட்ட பாம்பை அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு காட்டிக்கொண்டிருந்த வனத்துறை ஊழியர்கள் ஆபத்தை உணராமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.