சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்: அவதியில் மக்கள் - சென்னை மழை நிலவரம்
சென்னையில் பெய்துவரும் கனமழையால், ஆதம்பாக்கம், பெரியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.