வீடூர் அணை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
விழுப்புரம் : தொடர் மழைக் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகக் கருதப்படும் தென்பெண்ணை, சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. தற்போது சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீடூர் அணையில் ஐந்து மதகுகள் திறக்கப்பட்டு 2600 கன அடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.