ராமநாதபுரத்தில் நூறு விழுக்காடு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி - Voter Awareness
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், நேற்று (மார்ச். 16) பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழு பெண்கள் வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டிருந்ததால், அவை மக்களை மிகவும் கவர்ந்தன. மேலும், சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இவ்விழாவில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மகளிர் திட்டத்திற்கான மகளிர் குழுக்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டியதோடு, அந்த பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு ஊக்கப்படுத்தினார்.