திருப்பத்தூரில் எருது விடும் விழா - 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு - பொங்கல் பண்டிகை 2022
திருப்பத்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் எருது விடும் விழா இன்று(ஜன.17) நடைபெற்றது. ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்றன. காளைகளுக்கு முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 70 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவைக் காண சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் திரண்டனர். காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.