பறவைகள் வாழ்விடத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வுப் பேரணி: 18 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டிய ஆட்சியர் - 18 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டிய நெல்லை ஆட்சியர்
அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் பறவைகள் மற்றும் அதன் வாழ்விடத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி இன்று (டிச. 18) நெல்லை நகரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவரும் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டினார். டவுன் நயினார் குளத்தில் தொடங்கிய இந்தப் பேரணி ராஜவல்லிபுரம் வழியாக கல்குறிச்சி குளத்தில் முடிவுபெற்றது.