தேசிய விளையாட்டு தினம் - கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் - paramakudi
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்-ஐ பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அசுகரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக பயிற்சி பெற்றுவரும் விளையாட்டு வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.