விவசாயி வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் ஆய்வாளர் - Corona Awareness in Nagapattinam
நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் பெரியசாமி, கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நடனமாடிய வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயி போல் வேடமணிந்து, 'பாலூட்டி வளர்த்த கிளி' என, நடிகர் சிவாஜி கணேசனின் பாடலை விழிப்புணர்வு பாடலாகப் பாடி நடனமாடினார். இவருடன் சக காவலர்கள் கரோனா வைரஸ் வேடமணிந்து தத்ரூபமாக நடித்தனர்.