Affection: ஈன்ற கன்றைப் பிரித்ததாக நினைத்த தாய் எருமையின் பாசப்போராட்டம்! - தாய் எருமையின் பாசப்போராட்டம்
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் மோகன், எருமை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்கிறார். தான் வளர்க்கும் எருமை மாடுகளில் ஒன்று மேய்ச்சலுக்காக சென்ற இடத்தில் கன்றை ஈன்றது தெரியவந்தது. இதையடுத்து கன்றை வீட்டிற்குக் கொண்டுவர இருசக்கர வாகனத்தில் அதை தூக்கிக் கொண்டு அவர் புறப்பட்டார். இதனையறிந்திடாத தாய் எருமை, தன் கன்றை எங்கோ கொண்டு செல்கிறார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் செல்லும் வழியில் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடி சென்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உண்மையான தாய்ப் பாசத்தை கண்டு நெகிழ்ந்தனர்.
Last Updated : Nov 22, 2021, 10:00 PM IST