திம்பம் மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் லங்கூர் இன குரங்குகள்
ஈரோடு: கோடை காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, திம்பம் மலைப்பாதை அருகே உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காய்கறி, பழங்களை உண்ண கொடுத்து பழக்கியுள்ளனர். இதையறிந்த வனத்துறையினர், குரங்குகளுக்கு உணவளித்து சோம்பேறியாக்கக்கூடாது என எச்சரித்துள்ளனர். தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையிலும் கூட, குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் அமர்ந்து, காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.