லீவு எடுக்காமல் பள்ளிக்கூடம் போகும் குரங்கு! - students
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு குரங்கு ஒன்று தினமும் தவறாமல் வருவதுடன், மாணவர்களின் உற்ற நண்பனாக வலம்வருவது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களும் குரங்கினைத் தங்களது நண்பனாக ஏற்றுக்கொண்டு அதற்கு தினமும் உணவு வழங்குவது, அதனுடன் விளையாடுவது என இருக்கின்றனர். மேலும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித தொந்தரவையும் அந்த குரங்கு தராததால், குரங்கினை வகுப்பறைக்குள் அனுமதிக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குரங்கிற்கும் உள்ள இந்தப் பாசப்பிணைப்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.