நண்பகல் 12 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் ஸ்டாலின்! - திமுக வேட்பாளர்கள் பட்டியல்
திமுக வேட்பாளர்கள் பட்டியல் சரியாக 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் 12 கட்சிகள் இருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகளின் தேர்வு நேற்று (மார்ச் 11) இறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். 173 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ள நிலையில், ஒரே கட்டமாக அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Mar 12, 2021, 1:49 PM IST