மணிமுக்தா அணை நீர் திறப்பு; மலர்தூவி வரவேற்ற அமைச்சர் எ.வ.வேலு! - மணிமுக்தா அணை
கள்ளக்குறிச்சியின் மணிமுக்தா அணையானது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 993 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மலர்தூவி பாசன நீரை திறந்து வைத்தார்.