குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூக்கத் தொடங்கிய மினியேச்சர் குறிஞ்சி மலர்கள்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டுகால பழமைவாய்ந்த மரங்கள், தாவரங்கள் உள்ளன. இவைகளைக் காண்பதற்காக வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன், 2ஆவது சீசனுக்கு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக லட்சக்கணக்கான நாற்றுக்கள் நடவுசெய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது குறிஞ்சி மலர் நாற்றுகள் நடவுசெய்து வளர்க்கப்பட்டுவருகிறது. இதில் ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகை நீலக் குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு விருந்தாத அமையும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.