தொடர் மழை - உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையிலிருந்து, முவாயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது போன்று 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் அணையில் இருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து சிதறால், திக்குறிச்சி, பரக்காணி உட்பட ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தபட்டுள்ளனர்.