’எஸ்பிபியை கூட்டுப் பிரார்த்தனையால் மீட்டெடுப்போம்’- ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு! - ilayaraja video
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ச்சியாக அவரது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடுகிறது. இந்நிலையில், எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர நடைபெறவுள்ள கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.