குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - சாலைகளில் வெள்ளம்! - குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையாலும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் மஞ்சள் நிறத்தில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. பழைய அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பாலருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி என மொத்தம் உள்ள 9 அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. பொதுமக்கள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.