குன்னூரில் கடும் குளிர்: பார்வைக்கு இதமளிக்கும் நீர்ப்பனி மேகமூட்டம் - நீலகிரியில் பனி பொழிவு
நீலகிரி: குன்னூர் பகுதிகளில் இரண்டு நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பகல் நேரங்களில் மேகமூட்டத்துடன் நீர்ப்பனி ஆரம்பித்துள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரத்திலும் வாகனத்தில் விளக்குகளை பயன்படுத்தி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.