ராமநாதபுரத்தில் 1 மணி நேரம் நீடித்த கனமழை! - ராமநாதபுரத்தில் மழை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நகர்ப் பகுதியில் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்துவந்த நிலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து பட்டணம்காத்தான், பாரதிநகர், அச்சுந்தன்வயல், பேராவூரணி, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.