குமரியில் அதிகாலை முதல் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் அடித்துவந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை, திருவட்டார் உட்பட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய, கனமழை பெய்துவருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.