குன்னூரில் கனமழை: தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கு விடுமுறை - நீலகிரி தேயிலை தோட்டம்
நீலகிரி: குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இரவு நேரங்களில் கன மழை பெய்வதால் சில இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது தொடர் மழை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் குளிர்நிலவுவதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 30, 2021, 9:42 AM IST