புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய கனமழை! - pudukottai rain
புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியஸ் பதிவாகி மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென்று கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, திருமயம் போன்ற பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள், திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.