அரியலூரில் ஆலங்கட்டி மழை - ariyalur district news
அரியலூரில் நேற்று (செப்.27) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோவிலூர் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது பொதுமக்கள் ஆலங்கட்டிகளை மருத்துவத்திற்காக சேகரித்தனர். மேலும் இந்த மழையால் மக்காச்சோளம், பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.