கோவையில் விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன் - எல்லோ என்ட்யூனா
கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் பகுதியில் மிஸ்டர் பிஸ் என்ற மீன் கடையை நடத்தி வருகிறார். நேற்று (நவம்பர் 29) கர்நாடக மாநிலம் மங்களாபுரம் கடலில் இருந்து பிடிக்கப்பட்ட 'எல்லோ என்ட்யூனா' என்ற ராட்சத மீனை ஏலத்தில் அவர் வாங்கி வந்துள்ளார். இதன் எடை 86 கிலோ ஆகும். இந்த மீன் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Last Updated : Nov 30, 2021, 6:58 PM IST