காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள்: சிறுவனின் அசத்தல் - மயிலாடுதுறையில் கைவினைப் பொருட்கள் செய்யும் சிறுவன்
மயிலாடுதுறை: காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரித்து மற்ற சிறுவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வரும் தரகம்பாடியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஸ்டீபன் பாபுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் கரோனா ஊரடங்கு நேரத்தில் இணையதளத்தை பார்த்து இதனை கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.