ரூ.10,000 கரோனா நிவாரணம் வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்! - ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரணம்
தூத்துக்குடி: கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், இலவசமாகப் பயணிக்க பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிடட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன்டா இயக்கம் மாநிலச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மேளதாளம் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.