மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் படகுகள்!
கடலூர் துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் ஜூன்.14 இரவு 12 மணியோடு முடிவு பெறும் நிலையில், இங்கிருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதற்காக விசைப்படகுகளில் டீசல் நிரப்பப்பட்டு, ஐஸ்கட்டிகள் நிரப்பப்படுகிறது. தற்போது அதன் பிரத்தியேக காட்சிகள்.