சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர்: சிவகாசி அருகே எம். புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில், இன்று (ஜனவரி 1) காலை பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும், தீயை அணைப்பதற்கும் சிவகாசியிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Last Updated : Jan 1, 2022, 5:18 PM IST