Mayiladuthurai: துலா உற்சவத்தை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி - மயிலாடுதுறை நாட்டியாஞ்சலி
மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவத்தில் அபிநயா நாட்டியாஞ்சலி நடனப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் கடைமுகத் தீர்த்தவாரி தினத்தன்று நாட்டியாஞ்சலி நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் கண்ணன் வேடமிட்டு, குழந்தை ஒன்று பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.