யானைகள் நலவாழ்வு முகாமிற்கு மாயூரநாதர் கோயில் யானை அனுப்பிவைப்பு! - கோயில் யானை
தமிழ்நடு அரசின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம். இம்முகாமுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பிவைக்கப்படும். இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, யானைகள் நலவாழ்வு முகாமுக்கு புறப்பட்டது. முன்னதாக, மாயூரநாதர் கோயில் முன்பு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.