ஆசனூர் அருகே அரசுப் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்த காட்டு யானை
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி சாலைகளில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மைசூர் செல்வதற்காக தமிழ்நாடு அரசுப் பேருந்து ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனது குட்டியுடன் வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து அட்டகாசம் செய்துள்ளது.