தேர்தலைப் புறக்கணிக்கும் நாகூர் சந்திரா கார்டன் மக்கள்: காரணம் இதுதான்!
நாகப்பட்டினம் அடுத்துள்ள நாகூர் சந்திரா கார்டன் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக மனு அளித்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தேசிய நெடுஞ்சாலையில் பதாகை வைத்து மக்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.