நீரில் மூழ்கிய தண்டவாளம் - சிரமத்திற்கு மத்தியில் ரயில் இயக்கம்
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால், ரயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று (நவ.7) மாலை மின்சார ரயில் பல இடங்களில் கடும் சிரமத்திற்கு மத்தியில் இயக்கப்பட்டன. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ஆங்காங்கே இரயில்வே ஊழியர்கள் நின்று ரயில் இயக்கத்திற்கு உதவி செய்தனர்.