சாலையை மெத்தையாக்கி உறங்கிய போதை ஆசாமி; பயணிகள் அவதி!
ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை நடுவே மது போதையில் இளைஞர் ஒருவர் படுத்துக் கொண்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்ட மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர், அந்த வாலிபரைத் தூக்கிச் சென்று சாலையோரம் படுக்க வைத்தார். இதையடுத்து சாலையில் நின்றிருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.