Viral Video: தேசிய நெடுஞ்சாலையில் உருண்டுபுரண்ட மதுப்பிரியர் - மதுப்பிரியர்
கடலூர்: கடலூரிலிருந்து விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (பிப். 9) மாலை கிஷோர் குமார் என்பவர் குடிபோதையில் தோப்புக்கொல்லை என்ற இடத்தில் சாலையில் படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராஜாங்கம், காவலர் ஒருவர், குடிபோதையில் இருந்தவரை அழைத்துச் சென்று அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அனுப்பிவைத்தனர்.