பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு படையெடுக்கும் வனவிலங்குகள்! - sathy
சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மாயாறு மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி உள்ளதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி மாயாற்றுப்படுகை மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு சென்று நீர் அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. தற்போது அங்கு புலி மற்றும் செந்நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.