திமுகவின் கதாநாயகன் தேர்தல் அறிக்கை! - மு.க.ஸ்டாலின் வர்ணிப்பு! - ஸ்டாலின்
திமுகவின் மிக முக்கிய தேர்தல் பங்களிப்பாக கருதப்படும் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். எப்போதும் போல மக்களை கவரும் பல திட்டங்கள் வாக்குறுதிகளாக அதில் கொடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றும், இத்தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் என்றும் அவர் தேர்தல் அறிக்கையை வர்ணித்துள்ளார்.