மதுக்கடையைத் திறக்க எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்! - திருவாரூர் மாவட்ட செய்திகள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 43 நாள்களாக தமிழ்நாட்டில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் இயங்கிவரும் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திருவாரூரில் டாஸ்மாக் திறந்ததைக் கண்டித்து திமுகவினர், இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் நாகை எம்பி செல்வராஜும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.