சட்டப்பேரவை வளாகத்தில் மாணவர்களிடம் பேசி மகிழ்ந்த திமுக தலைவர் ஸ்டாலின்! - DMK leader Stalin
சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தை பார்வையிட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். அப்போது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி பேச நேரம் ஒதுக்காமையினால் வெளிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வந்து கொண்டிருக்கையில் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கியும், பேசியும் தனது இயல்புத் தன்மையை வெளிப்படுத்தினர்.