வாக்குறுதிகளை படிக்க முடியாமல் திணறிய விஜய பிரபாகரன்! - தேமுதிக விஜய பிரபாகரன்
ஈரோடு: பவானிசாகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.ரமேஷை ஆதரித்து, சத்தியமங்கலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ரமேஷ் எழுதிக் கொடுத்த கடிதத்தில் தொகுதிக்கான திட்டங்கள் குறித்து எழுதப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்கிப் படித்த விஜய பிரபாகரன், வேட்பாளரின் கையெழுத்து மற்றும் வாக்கியங்கள் புரியாமல் வாசிக்கத் திணறினார்.