குடிமராமத்து பணியை ஆய்வு செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - District collector
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 65 கண்மாய்களை முதலமைச்சர் குடிமாரமத்து பணிகள் மூலம் சுமார் 26.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இம்மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று விருதுநகர் அருகே உள்ள ஒண்டிபுலி நாயக்கனூர் கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பார்வையிட்டார்.