பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் - சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை: காட்டாம்பூண்டி, சானானந்தல், பாவுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று (மார்ச்.28) வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, முதுகில் அலகு குத்தி, தொங்கியபடி வீதியுலா வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.